Sunday 9 October, 2011

வாழ்வியல் சுகத்திற்கு அழகிய மருத்துவம் அக்குபஞ்சர்



எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே !!!!!!

வாழ்வியல்  சுகத்திற்கு அழகிய மருத்துவம் அக்குபஞ்சர் என்று சொன்னால் அது மிகையாகது. 

இறைவன் தனது படைப்புகளிலேயே மிகச் சிறந்த படைப்பாக  மனித இனத்தைப் படைத்துள்ளான்.  ஆனால் இந்த மனிதனுக்குத் தான் எத்தனை விதமான நோய்கள், தினமும் புதுப் புது பெயர்களில். மனிதன் தனக்கு ஏற்பட்ட நோய்களை சரி செய்துக் கொள்வதற்கு அக்குபஞ்சர் மருத்துவம் இறைவன்  மனித இனத்திற்குஅளித்த அருள் கொடை என்று சொன்னால் மிகை ஆகாது.

காரணம் இறைவன் மனிதனுக்கு தேவையான நீர், நிலம், நெருப்பு, காற்று மற்றும் மரம் இவைகளை மனிதனை படைப்பதற்கு முன்னாள் படைத்துவிட்டான்.  

நமது  உடல் உறுப்புகளும் நீர், நிலம், நெருப்பு, காற்று மற்றும் மரம் என்னும்
5 பஞ்ச பூதங்களின் இயக்கத்தின் அடிப்படையில் இயங்குகின்றது. இவைகளின்  இயக்கம் மாறுபடும்போது நமக்கு நோய்களும் அதனால் பாதிப்புகளும் ஏற்படுகின்றது.

இவ்வாறு ஏற்படும் நோய்களையும் அந்த நோய்களினால் ஏற்படும் விளைவுகளை சரி செய்வதற்காக நாம் உண்பவற்றில் பெரும்பாலானாவை நஞ்சாக இருப்பதோடு பல புதிய நோய்களை உருவாக்குவதில் வீரியம் பெற்றுள்ளன. இதனால் ஏற்படும் பக்க விளைவுகளின் பாதிப்புகளை விவரிப்பதற்கு பல புத்தகம் தேவைப்படும். பல மருத்துவர்கள் இலாபம் ஒன்றே குறிக்கோளாக தேவையற்ற மருந்துகளை அளவுக்கு அதிகமாக எழுதிக் கொடுக்கும் கொடூரமும் ஏராளம்.

மருத்தவமும், மருந்துகளும் நோயைக் குணப்படுத்தக் கூடியதாகவும் பக்கவிளைவுகள் இல்லாமலும் இருக்க வேண்டும். இன்றைய நவீன மருத்துவ ஆராய்ச்சிகள் இதற்கு நேர் மாற்றமாக இருக்கின்றன.  இது போன்ற சூழலில் மருந்து இல்லாத பக்கவிளைவுகள் இல்லாத நோய்கள் முற்றிலும் குணமடையக் கூடிய சிகிச்சை முறை தேவை என நாம் அனைவரும் எதிர்பார்கின்றோம். 

நம்முடைய இந்த எதிர்பார்ப்பை அழகிய மற்றும் எளிய முறைகளில் அக்குபஞ்சர் மருத்துவம் நிவர்த்தி செய்கின்றது.  எப்படி என்றால் நாடி பரிசோதனையின் மூலம் உடல் உள்ளுறுப்புகளின் இயக்க குறைப்பாட்டை அறிய முடிகின்றது. அதனால்     ஏற்படும்  நோய்களையும் நோயினால் ஏற்பட்ட விளைவுகளும்  சரி செய்யப்படுகிறது.

இந்த மருத்துவ முறையில்:

     > மருந்துகளும் இல்லை, மாத்திரைகளும் இல்லை.
        அதனால் ஏற்படும் பக்க விளைவுகளும் இல்லை.

     > விலை உயர்ந்த ஸ்கேன் தேவை இல்லை,
        இதனால் ஏற்படும் அனாவசிய செலவுகளும் இல்லை.

     > சிறுநீர், மலம் மற்றும் இரத்த பரிசோதனை தேவை இல்லை.

     > சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அணைத்து வயதினர்க்கும்
        ஏற்ற அழகிய மருத்துவம்.

     > இறைவன் நாடினால் மரணம் மற்றும் முதுமை இவற்றைத் தவிர   
         அணைத்து வியாதிகளுக்கும் அழகிய முறையில் தீர்வு உண்டு.

     > நோய்களை ஏற்படுத்தும் காரணத்தை சீர் செய்வதால் நோய்களையும்
        அதனால் ஏற்படும் விளைவுகளையும் இந்த மருத்துவம் சீர் செய்கிறது.


இந்த மருத்துவ முறையின் மகத்துவத்தையும் சிறப்புகளையும் சொல்லிக்கொண்டே இருக்கலாம். இனி வரக்கூடிய பதிவுகளில் நோய்களில் இருந்து நம்மை எவ்வாறு தற்காத்துக் கொள்வது, நோய் வந்த பின்பு எவ்வாறு குணமடைவது என்பதை விரிவாகக் காண்போம் இறைவன் நாடினால்.

நேயம் அக்குபஞ்சர்

Sunday 2 October, 2011

வாழ்வியல் சுகத்திற்கு அழகிய மருத்துவம் அக்குபஞ்சர்